சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்கா அபார பந்துவீச்சு... இங்கிலாந்து 179 ரன்களில் ஆல் அவுட்

3 hours ago 1

கராச்சி,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கராச்சியில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (பி பிரிவு) அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதனைதொடர்ந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 8 ரன்களிலும், டக்கெட் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேமி சுமித் ரன் எதுவுமின்றியும் வீழ்ந்தார். இந்த மூவரின் விக்கெட்டையும் மார்கோ ஜான்சன் கைப்பற்றினார். தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

பின்னர் வந்த ஜோ ரூட் தனது பங்குக்கு 37 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களில் ஹாரி புரூக் 19 ரன்களிலும், கேப்டனாக கடைசி போட்டியில் களமிறங்கிய பட்லர் 21 ரன்களிலும் ஜோப்ரா ஆர்ச்சர் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து 179 ரன்களில் ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன், முல்டர் தலா 3 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது. 

Read Entire Article