சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவன் முதலிடம்

3 months ago 20

காவேரிப்பட்டணம், அக்.11: காவேரிப்பட்டணம் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் திரிஷித் என்ற மாணவன், ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளியில் நடந்த கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி ெபற்றுள்ளார். இதன் மூலம், மாநில போட்டியில் அந்த மாணவன் பங்கேற்க உள்ளான். மாணவனுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ் பதக்கம் அணிவித்து பாராட்டினார். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன், உடற்கல்வி ஆசிரியை சங்கீதா, பள்ளியின் உதவி ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் முருகன், செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

The post சதுரங்க போட்டியில் அரசு பள்ளி மாணவன் முதலிடம் appeared first on Dinakaran.

Read Entire Article