பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவாது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் அடித்தன.
இதனையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முன்னதாக இந்த போட்டியில் விராட் கோலி அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 30-வது சதமாக பதிவானது. மேலும் ஒரு வருடம் கழித்து டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார்.
அவை விவரம் பின்வருமாறு:-
1. டெஸ்ட் போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
1. சுனில் கவாஸ்கர் - 13 சதங்கள் - வெஸ்ட் இண்டீஸ்
2. சச்சின் டெண்டுல்கர் - 11 சதங்கள் - ஆஸ்திரேலியா
3. சச்சின் டெண்டுல்கர் - 9 சதங்கள் - இலங்கை
3. விராட் கோலி - 9 சதங்கள் - ஆஸ்திரேலியா
2. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை பட்டியலில் சுனில் கவாஸ்கருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
1. கவாஸ்கர் - 7 சதங்கள் - வெஸ்ட் இண்டீஸ்
1. விராட் கோலி - 7 சதங்கள் - ஆஸ்திரேலியா
2. ராகுல் டிராவிட் - 6 சதங்கள் - இங்கிலாந்து
2. சச்சின் - 6 சதங்கள் - ஆஸ்திரேலியா
3. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்களின் சாதனை பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
1. ஜாக் ஹோப்ஸ் - 9 சதங்கள்
2. வாலி ஹம்மண்ட்/விராட் கோலி - 7 சதங்கள்
3. ஹெர்பர்ட் சட்க்ளிப்/சச்சின் டெண்டுல்கர் - 6 சதங்கள்