சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு

3 months ago 22

சென்னை,

தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.

இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சண்முக பாண்டியன் கடைசியாக 'மதுர வீரன்' திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக 'படை தலைவன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நகைச்சுவை கலந்த இக்கதையில், ரவுடியாக சண்முக பாண்டியன் நடித்து வருகிறாராம். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும் நாயகியாக தார்னிகா என்பவரும் நடிக்கின்றனர். தார்னிகா நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்திற்கு 'கொம்புசீவி' எனப் பெயரிட்டுள்ளதை படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. போஸ்டரில் சரத்குமார் நடுவில் அமர்ந்திருக்க, பக்கத்தில் துப்பாக்கியுடன் சண்முக பாண்டியன் நிற்கிறார்.

இப்படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் பொன்ராம் அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

1996 வாக்கில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகள் #StarCinemas @mukesh_chelliah Presents #Kombuseevi #கொம்பு சீவி @realsarathkumar #ShanmugaPandian Dir by @ponramVVS#Tharnika #KalkiRaja @kaaliactor @balasubramaniem @thisisysr @DPonnuraj pic.twitter.com/tNUNKsDpXM

— ponram (@ponramVVS) October 12, 2024
Read Entire Article