சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
செல்லூர் ராஜு: கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதிதான் செலவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: நீங்கள் பசுமை வீடு அறிவித்தீர்கள். ஆனால் முழுமையாக செயல்படுத்தவில்லை. மே மாதம் 31ம் தேதிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். எடுத்த உடனே எந்த திட்டத்திற்கும் முமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை, படிப்படியாக தான் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். கடந்த ஆண்டு முதலமைச்சர் சாலை திட்டத்தில் ரூ.4,000 கோடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்தார் என பதில் அளிக்கப்பட்டது.
செல்லூர் ராஜு: பள்ளி மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான பள்ளி கட்டிடம் சேதம் அடைந்துள்ளன.
அமைச்சர் ஐ.பெரியசாமி: 50 ஆண்டு காலம் கட்டப்படாத பள்ளிகள் எல்லாம் புதிதாக, அழகான பள்ளிகளாக உருவாக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். கடந்த ஆண்டு 6,000 பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உங்கள் ஆட்சியில் எவ்வளவு பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என கூறுங்கள்? என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ்: அதிமுக ஆட்சியில் 513 பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளனர், அதில் 300க்கும் அதிகமான பள்ளிகளில் உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது, அதையும் சேர்த்து நாங்கள் இன்று கட்டுகிறோம். திமுக ஆட்சியில் 7,600 வகுப்பறைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா: தண்ணீரில் தெர்மாகோல் விடுவது எளிது, விமான நிலையம் அமைப்பது அப்படியல்ல. நிலம் கையகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து, ஒன்றிய அரசின் அனுமதி பெற்று ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும்.
செல்லூர் ராஜூ: “தெர்மாகோல்.. தெர்மாகோல்னு.. சொல்றீங்க, ஆனால் அதிகாரி சொல்லித்தானே போனோம். இப்படி கிண்டல் செய்கிறீர்கள், சரி பரவாயில்லை”.
செல்லூர் ராஜு: திமுக ஆட்சி அமைந்த பிறகு எத்தனை பேருந்துகள் வாங்கப்பட்டன என்று விளக்கபடவில்லை? என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் சிவசங்கர்: சனிக்கிழமை காலை வந்தால் எத்தனை பேருந்துகள் வாங்க உள்ளோம் என்பதை நேரில் பார்த்துக் கொள்ளலாம். மினி பேருந்துகளுக்கான அனுமதி தொடர்பாக வழிதடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மே மாதம் முதல் வாரத்தில் மினி பேருந்துகள் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார் என பதில் அளித்துள்ளார்.
The post சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்விக்கு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஸ், டி.ஆர்.பி. ராஜா, சிவசங்கர் பதில்!! appeared first on Dinakaran.