வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு

3 hours ago 3

சென்னை: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனவசதிக்காக 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம். வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 19.03.2025 முதல் 27.04.2025 வரை பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 11 ஏரிகளுக்கு தொடர்ந்து 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கன அடி தண்ணீர் விட்டும். புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள 14 ஏரிகளுக்கு 20 நாட்களுக்கு விநாடிக்கு 30 கன அடி வீதம் 51.840 மில்லியன் கன அடி தண்ணீர் விட்டும், ஆக மொத்தம் 40 நாட்களுக்கு 5108 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 103.68 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பழைய ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகள் 5108 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

The post வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article