சென்னை: சபாநாயகருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழக சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்.8) கருப்புச் சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்தனர்.
தமிழக சட்டப்பேரவை நடந்து வரும் நிலையில், திங்கட்கிழமை (நேற்று) சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள் டாஸ்மாக் ஊழலை குறிப்பிடும் வகையில் ' யார் அந்த தியாகி ' என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். தொடர்ந்து டாஸ்மாக் ஊழலை பற்றி விவாதிக்குமாறு பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.