வேதாரண்யம், ஏப். 17: வேதாரண்யம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் தீயணைப்பு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தீத்தொண்டு நாள் விழா அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் மலர் வளையம் வைத்து, உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தீத்தடுப்பு வார விழாவை முன்னிட்டு பேருந்து நிலையம், கடைகள் மற்றும் முக்கிய அலுவலகங்களில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கினர்.
The post வேதாரண்யம் தீயணைப்பு நிலையத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி appeared first on Dinakaran.