வேதாரண்யம், ஏப்.17: வேதாரண்யம் பகுதியில் சுகாதாரத்துறையினர் குடும்ப பதிவேடுகள் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வேதாரண்யம் வட்டாரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜசேகர் தலைமையில் கிராம வாரியாக உள்ளடக்கிய குடும்ப உறுப்பினர்கள் விபரம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குடும்ப பதிவேடு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கணக்கெடுப்பு செய்யப்பட்ட குடும்ப பதிவேடுகளை சரி பார்க்கும் பணி செவிலியர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்களால் தற்போது தோப்புத்துறையில மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணியினை நாகப்பட்டினம் மாவட்டம் சுகாதார துறை உதவி இயக்குநர் மற்றும் இணை மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சமூக சுகாதார செவிலியர் சுனந்தா தேவி, கிராம சுகாதார செவிலியர் சக்தி பிரியா, சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் சுகாதாரத் துறையினர் உடன் இருந்தனர்.
The post வேதாரண்யம் வட்டாரத்தில் குடும்ப பதிவேடுகள் சரிபார்ப்பு பணி ஆய்வு appeared first on Dinakaran.