வேதாரண்யம், ஏப். 17: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து மற்றும் பிற விபத்துகள் தடுப்பு முறைகள், முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் விபத்தில்லா வாழ்க்கைக்கான ஆலோசனைகள், தீ தடுப்பு சாதனங்களை கையாளும் முறைகள் வாகனங்களை கடக்கும் முறைகள் அனைத்து விபத்துகளுக்குமான முதலுதவி சிகிச்சை முறைகள்,
அவசரகால தொலைபேசி – அலைபேசி எண்கள் ஆகியவைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன்பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் புயல் குமார் வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் முருகானந்தம் அனிதா இந்திராணி கலைச்செல்வி ஆகியோர் பேசினர் பள்ளி ஆசிரியர் மாணிக்கம் நன்றி கூறினார்.
The post வேதாரண்யம் தீயணைப்பு துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு-முதலுதவி பயிற்சி appeared first on Dinakaran.