லண்டன்: நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 2வது டெஸ்டில் அபாரமாக ஆடி 323 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்சில் ஆடிய ஜோ ரூட், 36வது சதமாக 106 ரன்களை குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் 12,886 ரன் குவித்துள்ள ஜோ ரூட், ஆஸி ஜாம்பவான் ரிக்கி பான்டிங்கை பின்னுக்கு தள்ள இன்னும் 492 ரன்களே தேவை. டெஸ்ட் ரன் பட்டியலில் 15,921 ரன்னுடன் முதலிடத்தில் உள்ள டெண்டுல்கரை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு 3,036 ரன்களே தேவை. 2021க்கு பின் ஜோரூட்டின் ரன் வேகம் மிரள வைப்பதாக உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் இவர் 19 சதங்களை விளாசித் தள்ளியுள்ளார். இந்த காலக் கட்டத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 9, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 6, இந்தியாவின் விராட் கோஹ்லி 3 சதங்களை மட்டுமே அடித்துள்ளனர். இதே வேகத்தில் ரன் மெஷினாக ஜோ ரூட்டின் செயல்பாடு தொடர்ந்தால் விரைவில் டெண்டுல்கரின் சாதனைகளை தகர்ப்பார் என கிரிக்கெட் வல்லுனர்கள கூறுகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளை போல் அடுத்த 4 ஆண்டுகளிலும் ஜோ ரூட்டின் பேட்டிங் மிரட்டல் தொடர்ந்தால் பட்டியலில் முதலிடத்தை எட்டிப் பிடிப்பது நிச்சயம்.
The post சச்சின் சாதனைகளை நோக்கி… சிறுத்தையாய் முன்னேறும் ‘ரன் மெஷின்’ ஜோ ரூட்; 4 ஆண்டுகளில் 19 சதம் appeared first on Dinakaran.