சசிகுமார் நடித்த 'பிரீடம்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

3 months ago 23

சென்னை,

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 'ப்ரீடம் ஆகஸ்ட் - 14' எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார். இப்படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். சிநேகன், மோகன் ராஜா பாடல்களை எழுதுகின்றனர். படம் தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

விஜய கணபதி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில், ஆயுதபூஜையை முன்னிட்டு சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Team @SasikumarDir's #Freedom Wishing Wishing you a blessed #AyudhaPooja and #SaraswathiPooja filled with prosperity, knowledge, and success.Directed by @Sathyasivadir Produced by @vijayganapathys @PandiyanParasu Music by @GhibranVaibodha@jose_lijomol #CUdhayakumarpic.twitter.com/HDyVLHkYSh

— Pandiyan Parasuraman (@PandiyanParasu) October 11, 2024
Read Entire Article