சென்னை: வேளச்சேரியில் 2 இடங்களில் போக்குவரத்து மாற்றம்

5 hours ago 4

சென்னை,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை ஆயில்மில் பஸ் நிறுத்தம் முதல் நாராயணபுரம் பஸ் நிறுத்தம் வரை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏற்படும் காலதாமதத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மேலும் சிலர் எதிர் திசையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவதால் அடிக்கடி விபத்துகளும் நடந்தன.

இதையடுத்து தாம்பரம் மாநகர பேக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி மெயின்சாலை மற்றும் துலுக்கானத்தம்மன் கோவில் சந்திப்பில் இருந்த சிக்னலை எடுத்து விட்டு தடுப்புகள் வைத்து அடைத்தனர். பின்னர் அந்த இடத்தில் இருந்து தாம்பரம் நோக்கி 500 மீட்டர் தூரத்தில் திரும்ப கூடிய வகையில் 'யூ' வடிவிலான வளைவுகளை அமைத்துள்ளனர். இந்த இடத்தில் பள்ளிக்கரணை துலுக்கானத்தம்மன் கோவில் தெருவழியாக வரும் வாகனங்கள், பள்ளிக்கரணை கிழக்கு பகுதி மற்றும் நாரயணபுரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் திரும்பி பள்ளிக்கரணை மேற்கு பகுதியில் உள்ள நகர்கள், நாராயணபுரம் மற்றும் வேளச்சேரி நோக்கி செல்லலாம்.

அதேபோல் பள்ளிக்கரணை சிவன் கோவில் அருகிலும் இதுபோல் ஒரு திரும்பக்கூடிய வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பத்தில் தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் திரும்பி பள்ளிக்கரணை கிழக்கு பகுதியில் உள்ள நகர்கள், ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம் மற்றும் தாம்பரம் நோக்கி செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

 

Read Entire Article