சங்கர் இயக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் குறித்து படக்குழு அப்டேட்

2 months ago 13

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தியன்-2 படத்தின் எதிர்மறையான விமர்சனங்களைத் தொடர்ந்து சங்கர் இந்த படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்த படத்தை டிசம்பர் 20-ந்தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. பின்னர் 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ந்தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்தது. சமீபத்தில் இந்த படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது.

அதில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் குறித்த அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 9-ந்தேதி 'கேம் சேஞ்சர்' படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

This Train FIGHT High O high !! #GameChanger Teaser ON 9-11-2024 !! Let's HIT IT #GameChangerTeaser pic.twitter.com/MmVX9Vku6y

— thaman S (@MusicThaman) October 31, 2024
Read Entire Article