சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

3 months ago 19

சங்கரன்கோவில், அக்.8: சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். சங்கரன்கோவில் பாரதியார் 3ம் தெருவை சேர்ந்தவர் சாமித்துரை. இவரது மகன் உதயபாலன்(14). இவர் கோவில்பட்டியில் பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தற்போது காலாண்டு விடுமுறை காரணமாக உதயபாலன் சங்கரன்கோவிலுக்கு வந்திருந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த மின்சாதன பொருளை இயக்கிய போது திடீரென மின்சாரம் பாய்ந்து உதயபாலன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உதயபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தனர். மேலும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சங்கரன்கோவிலில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article