துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது இந்தியாவின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி 86 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் சிங்கிள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தி விராட் கோஹ்லி சதம் அடிப்பதற்கு உதவினார். இறுதியில் விராத் கோஹ்லி பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், ‘‘விராத் கோஹ்லி சதம் அடிப்பதற்கு எத்தனை ரன்கள் தேவை என நானும் கணக்கு போட்டுக் கொண்டே இருந்தேன்.
அந்த சமயத்தில் தெரியாமல் கூட பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பவுண்டரிக்கு போய்விடக் கூடாது என்று மிக கவனமாக இருந்தேன். இது போல் பேட்டிங் ஆடுவது கூட எனக்கு ஜாலியாக தான் இருந்தது. முதல் முறையாக அழுத்தம் நிறைந்த ஒரு போட்டியில் கோஹ்லி சதம் அடிப்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். அன்றைய நாளில் கோஹ்லியிடம் நிறைய கற்றுக் கொண்டேன். 50 ஓவர்கள் பீல்டிங் செய்த பின்பும் ரன்கள் எடுப்பதற்கு விராத்தால் எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறார். மேலும் அவர் பிட்னஸ் லெவலை பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது’’ என்று கூறினார்.
The post கோஹ்லியிடம் நிறைய கற்றுக் கொண்டேன்: அக்சர் பட்டேல் ஜாலி பேட்டி appeared first on Dinakaran.