
சென்னை,
ஓடிடியில் வெளியாகியுள்ள "கோஸ்டாவோ" படத்திற்கு சம்மதம் தெரிவித்ததற்கான மிகப்பெரிய காரணம், நவாசுதீன் சித்திக்குடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுதான் என்று நடிகை பிரியா பாபட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
"நவாஸ் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது நான் கோஸ்டாவோவுக்கு சம்மதம் தெரிவித்ததற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். நான் அவரது தீவிர ரசிகை.
அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள், படத்திற்கு கொடுக்கும் அர்ப்பணிப்பு எனக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றன. இப்படத்தில் அவரது மனைவியாக நடித்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த வாய்ப்புக்காக இயக்குனர் சேஜல் மேடம் மற்றும் முழு குழுவினருக்கும் நான் நன்றி தெரிவித்துகொள்கிறேன்' என்றார்.
'கோஸ்டாவோ' ஜீ 5 தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான 'டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பாபட். தொடர்ந்து 'காக்ஸ்பர்ஷ்', 'ஆம்ஹி டோகி', 'முன்னாபாய் எம்.பி.பி.எஸ்', 'லகே ரஹோ முன்னா பாய்', 'ஹேப்பி ஜர்னி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.