
பெரம்பலூர் அருகே ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இளைஞர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டமாந்துறை கிராமத்தில் ரஞ்சித்(30 வயது), தினேஷ்(28 வயது) என்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்றுள்ளனர். ஆற்றின் அருகே உள்ள மின்கம்பத்தில் ஒயரை இணைத்து, தண்ணீரில் போட்டு மின்சாரம் பாய்ச்சியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் இதுபோல சட்ட விரோதமாக சிலர் மீன் பிடிப்பதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.