பத்ரிநாத் கோவில் திறப்பு - 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம்

4 hours ago 3

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும். ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும்.

அதன்படி இந்த ஆண்டு அக்ஷயதிரிதியை தினத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 30-ந்தேதி 'சார் தாம்' யாத்திரை தொடங்கியது. அன்றைய தினம் கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மே 2-ந்தேதி அதிகாலை 7 மணிக்கு கேதர்நாத் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் நடை திறப்பை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 4-ந்தேதி(இன்று) பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் முழுவதும் சுமார் 15 டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் பத்ரிநாத்தில் உள்ள விநாயகர், ஆதி கேதரேஷ்வர், ஆதி குரு சங்கராச்சாரியர் மற்றும் மாதா மூர்த்தி கோவில் உள்ளிட்ட சன்னதிகளும் திறக்கப்பட்டன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பத்ரிநாத் கோவில் திறப்பை தொடர்ந்து 'சார் தாம்' யாத்திரை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. 

Read Entire Article