கோவைக்காய் வேர்க்கடலை வறுவல்

4 weeks ago 7

தேவையான பொருட்கள்:

கோவக்காய் – 400 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கடுகு – 1 டீஸ்பூன்
வேர்க்கடலை – 1 கைப்பிடி
குழம்பு மிளகாய் தூள் – 1 1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் கோவக்காயை நீரில் கழுவி, அவற்றை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய கோவக்காயைப் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, மூடி வைத்து, அவ்வப்போது கிளறி விட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.கோவக்காய் நன்கு வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் வேர்க்கடலை சேர்த்து, நன்கு வறுக்க வேண்டும்.பிறகு அதில் கோவக்காயை சேர்த்து கிளறி, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், சோம்பு தூள் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைத்து இறக்கினால், சுவையான கோவைக்காய் வேர்க்கடலை வறுவல் தயார்.

The post கோவைக்காய் வேர்க்கடலை வறுவல் appeared first on Dinakaran.

Read Entire Article