கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

4 weeks ago 6


கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 33 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

முன்னதாக கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூலி உயர்வு தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தோல்வியில் முடிந்ததை அடுத்து கடந்த 15ஆம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கினர். இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று (ஏப்ரல் 20) வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூரில் நடந்து வந்த விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து நாளை பொதுக்குழுவை கூட்டி விசைத்தறியை இயக்குவது குறித்து முடிவெடுப்போம் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article