கோவை பிஆர்எஸ் வளாகத்தில் முகாம்; ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: முதல்நாளில் 625 பேர் பங்கேற்பு

2 weeks ago 3


கோவை: இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி (பிஆர்எஸ்) வளாகத்தில் நேற்று துவங்கியது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. நேற்று காலை 5 மணிக்கு பிஆர்எஸ் வளாகத்தில் துவங்கிய முகாமில், தெலங்கானா, குஜராத், கோவை, புதுச்சேரி, தாதர் மற்றும் நாகர் ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவை சேர்ந்த 625 பங்கேற்றனர். இவர்கள் நேற்று முன்தினம் காலை முதலே ஆர்வமுடன் கோவையில் குவிய தொடங்கினர். நேற்று நடந்த முகாமில் கயிறு ஏறுதல், ஓட்டப்போட்டி நடந்தது. தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் இளைஞர்களின் உயரத்தை அளவீடு மூலம் சரிபார்த்தனர்.

வருகிற 7 மற்றும் 8ம் தேதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். 9ம் தேதி கேரளாவை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். உடற்தகுதி தேர்வு நடத்தி முடிந்த பின்பு 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்றவை மேற்கொள்ளப்பட்டு பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இன்று (5ம் தேதி) நடைபெறும் முகாமில் ஆந்திரா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்களுக்கு அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

The post கோவை பிஆர்எஸ் வளாகத்தில் முகாம்; ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு: முதல்நாளில் 625 பேர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article