கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு

4 hours ago 3

சென்னை,

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை நிலவரம்:

இன்று (25-05-2025): கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த இந்த இரு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்காசி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

நாளை (26-05-2025): நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டத்திலும் அதிகனமழை வரை பல இடங்களில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோல தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

27ம் தேதி மற்றும் 28ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் (27-05-2025) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 35 - 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணி வரை குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article