
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை கஜோல். 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே', 'குச் குச் ஹோதா ஹை', மற்றும் 'கபி குஷி கபி கம்' போன்ற கிளாசிக் படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்தி மட்டுமில்லாமல் தமிழ் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதன்படி, 'மின்சார கனவு' படத்தில் நடித்திருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுசுடன் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடித்தார்.
தற்போது கஜோல் ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் 'மா' படத்தில் நடித்து வருகிறார். விஷால் பியூரியா இயக்கும் இப்படத்தை அஜய் தேவ்கன் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே தயாரிக்கின்றனர். இப்படத்தில் கஜோலுடன் ரோனித் போஸ் ராய், இந்திரன் சென்குப்தா மற்றும் கெரின் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மா' திரைப்படம் ஜூன் 27-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலை, இப்படத்தின் அப்டேட்டை நடிகை கஜோல் வெளியிட்டுள்ளார். அதாவது, 'மா' படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.