கோவை-சில்சார் அதிவிரைவு ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கம் - தெற்கு ரெயில்வே

1 week ago 6

சென்னை,

ஒடிசா மாநிலம் கட்டாக் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 23-ந்தேதி, மார்ச் 2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அசாம் மாநிலம் சில்சார் செல்லும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.12515) கட்டாக் ரெயில் நிலையம் செல்லாமல் ஒடிசா மாநிலங்களான பராங், நாராஜ் மார்தாபூர், கபிலாஸ் சாலை சந்திப்பு ஆகிய மாற்றுப்பாதை வழியாக சில்சார் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article