
வெலிங்டன்,
நியூசிலாந்தில் நியூசிலாந்து தேசியவாத கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. அங்கு வர்த்தக துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஆண்ட்ரூ பேலி (வயது 63). கடந்த அக்டோபர் மாதம் தலைநகர் வெலிங்டனில் வணிகர்களுக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆண்ட்ரூ பேலி வணிகர்களுடன் உரையாடினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆண்ட்ரூ அந்த நபரை அவதூறாக விமர்சித்தார். அவரது இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தன. இந்தநிலையில் ஆண்ட்ரூ பேலி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேசமயம் எம்.பி.யாக அவர் தொடர்வார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.