
கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் பிரபலமான மதபோதகர் ஜான் ஜெபராஜ். இவர் கோவையில் உள்ல கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தில் மதபோதகராக செயல்பட்டு வந்தார்.
இதனிடையே, கடந்த ஆண்டு மே 21ம் தேதி மத போதகர் ஜான் ஜெபராஜ் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த பார்ட்டியின்போது 2 சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது.