
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் நிகழ்வில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஷியாம் சுந்தர் (17) மீது நாகேந்திரன் விழுந்துள்ளார். ஓரமாக சென்று நடனம் ஆடுங்கள் என அவர் கூறியதற்கு நாகேந்திரன் கத்தியால் குத்தியதில் நிகழ்விடத்திலேயே ஷியாம் சுந்தர் உயிரிழந்தார்.
கத்திகுத்தை தடுக்க வந்த அஜய், வசந்தகுமார் ஆகிய இருவரையும் கத்தியால் நாகேந்திரன் தாக்கியதாக கூறப்படுகிறது. சிறுவன் உயிரிழந்தநிலையில், மற்ற இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.