"கோலிசோடா" இயக்குனர் படத்தில் இணைந்த ஆரி

5 hours ago 4

சென்னை,

விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார்.அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் நடித்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. ஆரி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் ஜூன் 15ம் தேதி வெளியாகிறது.

From silent to siren, a powerful transformation awaits! Actor @Aariarujunan dons the khaki for the first time, stepping into an explosive new chapter #TitleAnnouncement on June 15 @itsRajTarun @vijaymilton @bharathhere @Aariarujunan @Ammu_abhirami @paal_dabba @ksd_offl pic.twitter.com/vwbENzWEBE

— Aari Arujunan (@Aariarujunan) May 25, 2025
Read Entire Article