சிவகங்கை, பிப். 8: சிவகங்கை அருகே இலுப்பக்குடி கிராமத்தில் வால குருநாதன் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று முதலாம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு புனித நிரப்பப்பட்ட 31 கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து கோ பூஜை, நவக்கிரக ஹோமம் யாக குண்டத்தில் 108 மூலிகைப் பொருட்கள் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்து பூர்ணகுதி அளிக்கப்பட்டன. கலசங்களுக்கு உதிரிப் புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மங்கல வாத்தியங்களுடன் கடம் புறப்பாடிற்கு பின்னர், வேத மந்திரங்கள் முழங்க மூலவர் சுவாமி அம்பாளுக்கும் மற்றும் 31 தெய்வங்களுக்கும் கலசத்தில் உள்ள புனிதநீரால் அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், ஏழு முக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டினர் செய்திருந்தனர்.
The post கோயில் வருடாபிஷேக விழா appeared first on Dinakaran.