குளத்தூர், டிச. 6: வேம்பார் சுப்பிரமணியபுரம் தெருவில் உள்ள கோயில் தரப்பினருக்கும், அதன் அருகிலுள்ள சர்ச் தரப்பினருக்கும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலப்பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 2.12.2023ல் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி கோயிலை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2ம்தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. மேலும் கோயில் தரப்பை சேர்ந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் தரப்பை சேர்ந்த காசிராமன், சூரங்குடி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் சர்ச் தரப்பை சேர்ந்த ஜாண்ஜேம்ஸ், வில்லியம்ஜேம்ஸ், அந்தோணிசந்திரசேகரன், விக்டர்இம்மானுவேல்சேகரன், ஜெபக்குமார், அந்தோணிராஜ், நடராஜன், யோவான், ராஜஜெயபிரபு, எடிசன், ஜான்சன், அருள்ராஜ், சாமுவேல்கிங்ஸ்லி, ஆல்வின், மிக்கேல், சந்திரன், எபனேசர் ஆகிய 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கோயில் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய 17 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.