சென்னை: 25வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு வரும் 7ம் தேதி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி 25 வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.
The post பிப்.7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.