கோத்தகிரி,ஜன.11: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் நீர்பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து நகர்புற பகுதிகள்,குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் கடும் குளிர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பகல் நேரங்களில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நீர்பனிப்பொழிவு பெய்யத் தொடங்கி காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
அத்தோடு இரவு பெய்யக்கூடிய நீர்பனி காரணமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நகர்புற பகுதிகள்,குடியிருப்பு பகுதிகள்,சாலைகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் கடும் குளிர் நிலவுவதோடு மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேல் நீர்ப்பனி பொழிவு காணப்படும் நிலையில் தற்போது காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மாலை, இரவு நேரங்களில் நீர்பனி பெய்து கடும் குளிர் நிலவி வருகிறது.
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் நகர்புற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்பட்டு வெறிச்சோடி காணப்படும் சூழல் உருவாகி இருந்தது. மேலும் உதகை, குன்னூர், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பனிமூட்டம் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.
குறிப்பாக காலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருவதால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் குளிரில் தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
The post கோத்தகிரியில் பனிமூட்டத்தால் கடும் குளிர் appeared first on Dinakaran.