ஊட்டி, ஜன. 25: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 27ம் தேதி கோத்தகிரி, சோலூர்மட்டம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் வரும் (27ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கோத்தகிரி துணை மின்நிலையம்: கோத்தகிரி, சுண்டட்டி, கப்பட்டி, உல்லத்தி, கேர்பென், குண்டாடா, ஒரசோலை, நாரகிரி, கேர்கொம்பை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேனு, பேரகணி, கேர்பெட்டா, மிலிதேன்.
ஒன்னட்டி துணை மின்நிலையம்: பங்களாபாடி, கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ் கோத்தகிரி, தாளமுக்கு, சோலூர்மட்டம், தேனாடு, நட்டக்கல், ஒன்னட்டி, தூனேரி, கரிக்கையூர், கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, மஞ்சமலை காலனி. கெரடாமட்டம் துணை மின்நிலையம்: கெரடாமட்டம், கோடநாடு, ஈளாடா, அண்ணாநகர், காந்திநகர், நெடுகுளா, கர்சன் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தெரிவித்துள்ளார்.
The post கோத்தகிரி, சோலூர்மட்டத்தில் 27ம் தேதி மின்தடை appeared first on Dinakaran.