பெரம்பூர்: சென்னை அயனாவரத்தில் உள்ள ஆதிசேமாத்தம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர், சந்திரயோகி சமாதி சாலையில் வட சென்னை வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.18.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய சமுதாய நலக்கூடத்திற்கான அடிக்கல் நாட்டினார்.மாநகராட்சி சார்பில் வார்டு 74க்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2.75 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கும் ரூபாய் 66.50 லட்சம் மதிப்பீட்டில் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, வீட்டுவசதி வாரிய செயலாளர் காக்கர்லா உஷா, தாயகம் கவி எம்எல்ஏ கலந்துகொண்டனர்.
முன்னதாக அமைச்சர் பிகே.சேகர்பாபு கூறியதாவது; வடசென்னை வளர்ச்சித் திட்டம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பாக சென்னை மற்றும் சென்னையை சுற்றி உள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்கள், 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு நலத்திட்ட பணிகளை 2023 முதல் மேற்கொண்டு வருகிறோம். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 682 கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதம் இருக்கக்கூடிய பணிகளுக்கு ஒவ்வொரு பணிகளாக பூமி பூஜை பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5 பேரை ஒருங்கிணைந்து குழு அமைத்துள்ளோம். 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் ஒப்பந்தம் கோரப்பட்டு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும்.
திருப்பரங்குன்றத்தில் அன்றைய கூட்டத்தில் கையெழுத்திடாமல் சென்றது அதிமுகதான் என மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். அதற்கு பரிகாரம் தேடுவதற்காக செல்லூர் ராஜு அப்படி பேசி வருகிறார். அவர் எப்போதும் எங்கள் பக்கம் நிற்பவர்தான். இவ்வாறு கூறினார்.கொளத்தூர் தொகுதியில் முதல்வரை தோற்கடிப்போம் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளது பற்றி கேட்டதற்கு, ‘’வாய்க்கொழுப்பு. அதை போலத்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதலமைச்சரை ராயபுரம் தொகுதியில் போட்டியிட கூறினார். அதற்கு முதலமைச்சர் அடக்கமாக பதில் கூறினார்.
தான் தேவை இல்லை, சாதாரண தொண்டனை நிறுத்துகிறேன், அவரை வெற்றி பெற்று வாருங்கள்’ என கூறினார் என்று பதில் அளித்தார்.ராயபுரத்தில் தோற்று பட்டினம்பாக்கம் போய்விட்டார். வேலுமணியை வர சொல்லுங்கள் முதல்வரிடம் போட்டி வேண்டாம் துறைமுகம் தொகுதிக்கான கதவு தாராளமாக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்று வர சொல்லுங்கள். அதன் பிறகு அவர் பேசட்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
The post வடசென்னை வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் பிகே.சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.