கோடியக்கரையில் மீன் விலை கடும் வீழ்ச்சி

1 week ago 2

வேதாரண்யம்,ஜன.31: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 5 டன்முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு இங்கு இருந்து பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலையில் காலாமீன், வஞ்சிரம், வாவல்மீன், ஷீலாமீன், முறல்மீன், கட்டாமீன், மயில்மீன், நீலக்கால் நண்டு, மூன்றுபுள்ளி நண்டு,

இறால் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான மீன்கள் கிடைத்து வருகிறது. நேற்று மீன் வரத்து அதிகமானதால் மீன் விலை வெகுவாக குறைந்தது. வாவல் மீன் ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ 800 ரூபாய்க்கும், ரூ.1000 விற்ற வஞ்சீரம் மீன் 500க்கும், 800 ரூபாய்க்கு விலை போன ஷீலாவின் 500 ரூபாய்க்கும், விற்றது. மீன் அதிகளவு கிடைத்தும் மீன்விலை சரி பாதியாக குறைந்துள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மீன் பிரியர்கள் விலை குறைந்ததனால் அதிக அளவில் மீன்களை வாங்கிச் சென்றனர். மீன் விலை இல்லததால் நேற்று அதிக மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க செல்லவில்லை.

The post கோடியக்கரையில் மீன் விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article