கோடநாடு வழக்கு: ஆத்தூர் ரமேஷ் 22-ந் தேதி ஆஜராக சம்மன்

18 hours ago 2

கோவை,

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீசார் கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக ஊட்டி கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த கார் டிரைவரான கனகராஜின் தம்பி தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் தனபால் மற்றும் அவருடைய உறவினரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் இந்த வழக்கில் தடயத்தை அழிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனபால், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தமிழக அரசு மாற்றியது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த கார் டிரைவரான கனகராஜின் தம்பி தனபாலின் உறவினர் ஆத்தூர் ரமேசை வருகிற 22-ந் தேதி ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது, கோடநாடு சம்பவத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சில சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அது தொடர்பாக ரமேசிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே அவரை 22-ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளோம் என்றனர்.

Read Entire Article