கோடங்கிப்பட்டி அருகே வண்ண வண்ண கோழிக்குஞ்சுகள் விற்பனை

2 months ago 16

கரூர், டிச. 19: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி அருகே வண்ண வண்ண நிறத்திலான கோழிக்குஞ்சு விற்பனை அதிகரித்துள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோடங்கிப்பட்டி செல்லும் சாலையோரம் ராயனு£ர் பகுதியை ஒட்டி சாலையோரம் வியாபாரிகள் சிலரால் கொண்டு வரப்படட வண்ண வண்ண கோழிக்குஞ்சுகள் பட்டியல் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் வளர்ப்பதற்கு உகந்த வகையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த வகை கோழிக்குஞ்சுகள் 5 குஞ்சுகள் ரூ. 100 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் வளர்க்கும் வகையில் அழகாக சுற்றித்திரியும் இந்த வகை கோழிக்குஞ்சுகளை அந்த வழியாக வாகனங்களில் செல்லும் அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர். நாமக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து இந்த வகை குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு இந்த பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.

The post கோடங்கிப்பட்டி அருகே வண்ண வண்ண கோழிக்குஞ்சுகள் விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article