கொளப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

3 months ago 16

 

பந்தலூர், அக்.14: பந்தலூர் அருகே நேற்று கொளப்பள்ளி பஜாரில் நீலகிரி சேவா கேந்திரம், பைன் கோல்டு பந்தலூர், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சேவா கேந்திர ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த ராஜ் தலைமை வகித்தார். முகாமினை வியாபாரி சங்க தலைவர் ராஜா, ஓட்டுநர் சங்க தலைவர் திவாகரன், சேவா கேந்திர பொறுப்பாளர் பாண்டியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பார்களாக சேவா கேந்திர அறங்காவலர் மனோஜ்குமார், ராஜேந்திரன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அபிஷேக் தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் சிகிச்சை அளித்தனர். முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 30 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சேவா கேந்திர தன்னார்வலர்கள் ராஜேஷ், கஜேந்திரன், ரவி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post கொளப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article