கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்கு இடம் ஒதுக்க கோரிக்கை

4 months ago 19

 

பந்தலூர், அக்.16: பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் நியாயவிலை கடை கட்டுவதற்கு இடம் கேட்டு வட்டாட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினரும் பந்தலூர் மேற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவருமான கோபாலகிருஷ்ணன், பந்தலூர் தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சிநகர் மற்றும் பேக்டரி மட்டம் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடைகள் தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நியாய விலை கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுகிறது. பேக்டரி மட்டம் குறிஞ்சி நகர் செல்லும் சாலையோரத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் தற்போது அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரியவருகிறது. எனவே இந்த இடத்தை ஆய்வு செய்து அரசு சார்பில் நியாய விலை கடைக்கு நிரந்தர கட்டிடம் மற்றும் சமுதாய கூடம், பயணிகள் நிழற்குடை ஆகியவை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் ரேஷன் கடை கட்டுவதற்கு இடம் ஒதுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article