நித்திரவிளை, ஏப்.22: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் மூலக் கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாதம் பத்தாம் நாள் பத்தாமுதய பொங்காலை நடத்தப்படுவது வழக்கம். இவ்வருடம் நேற்று காலை வழக்கமான பூஜைகள் முடிந்து 10.15 மணியளவில் பண்டார அடுப்பில் தேவஸ்தான தந்திரி ஈஸ்வரன் போற்றி தீ மூட்ட பக்தர்கள் தங்கள் அடுப்பிலும் தீ வைத்து பொங்கல் வழிபாடு செய்து அம்மனை வேண்டினர். தமிழக கேரள பகுதியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொங்காலையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்காலை நடப்பதை ஒட்டி பக்தர்கள் வசதிக்காக மேற்கு கடற்கரை சாலையில் கண்ணனாகம் சந்திப்பு முதல் பழைய உச்சக்கடை வரை கனரக வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் அட்வகேட் ராமச்சந்திரன் நாயர், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் டாக்டர் சதீஷ்குமார், துணைத் தலைவர் சதிகுமாரன் நாயர், இணைச் செயலாளர் பிஜு குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் சஜிகுமார், புவனேந்திரன் நாயர், ஸ்ரீகண்டன் நாயர், ஸ்ரீ குமாரன் நாயர், பிஜு, சதிகுமாரன் நாயர் ஆகியோர் செய்திருந்தனர்.
The post கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பத்தாமுதய பொங்காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.