வாஷிங்டன்: போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற தாக்குதலின் கீழ் 9 பாகிஸ்தான் தீவிரவாத மையங்கள் தாக்கப்பட்டன. இதனால் எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீண்டும் இந்தியாவை தாக்கலாம் என்பதால் தொடர்ந்து பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது. மோதலை தவிர்க்க ஆக்கப்பூர்வ பேச்சுக்களை இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான உதவிகளை செய்ய அமெரிக்கா தயார் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.
.
The post போர் பதற்றத்தை தணிக்க வழிமுறைகளை கண்டறியும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அறிவுரை appeared first on Dinakaran.