
சென்னை,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகின்ற 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகியதால் எஞ்சிய தொடருக்கு மகேந்திரசிங் தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கேப்டன்சி இந்த போட்டியிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டிக்கான சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காயம் காரணமாக விலகிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக ராகுல் திரிபாதியும், முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக அன்ஷுல் கம்போஜும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதிலாக மொயீன் அலி பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்க்யா ரகானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயீன் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி