சமந்தா தயாரித்த முதல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

20 hours ago 1

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சமந்தா சமீபத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற இந்த நிறுவனத்தின் கீழ் சமந்தா "சுபம்" என்ற படத்தை தயாரித்திருக்கிறார். பிரவீன் காந்த்ரேகுலா இயக்கும் இப்படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கின்றனர்.

சமந்தா தயாரித்த முதல் படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 9-ம் தேதி வெளியாக உள்ளது. 

May just got Subham-fied. See you at the movies on May 9th!@TralalaPictures #Subham pic.twitter.com/pNGCQdaKOd

— Samantha (@Samanthaprabhu2) April 18, 2025
Read Entire Article