கொல்கத்தாவில் ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் சிக்கிய 3 பேர் கைது

3 months ago 9

கொல்கத்தா,

கொல்கத்தாவின் சிறப்பு அதிரடிப் படை போலீசார் புர்ராபஜார் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு காரில் சோதனை நடத்திய போது அதில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கண்டுபிடித்தனர்.

அதில் ஒரு 9 எம்.எம் தானியங்கி துப்பாக்கியும், 7 எம்.எம். தானியங்கி துப்பாக்கியும், நான்கு வெற்று மேகசின்கள் மற்றும் 17 வெடிமருந்துகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த ஆபத்தான ஆயுதங்களை சிக்கிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article