பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 128.
வயது வரம்பு: 22.01.2025 தேதிப்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ரயில்வே விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி வழங்கப்படும் டிரேடுகள்: எலக்ட்ரீசியன்/பிட்டர்/வெல்டர்/மிஷினிஸ்ட்.
கட்டணம்: ரூ.100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.apprenticeship.india.org என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்து விட்டு, பின்னர் www.mtp.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.01.2025.
The post கொல்கத்தா மெட்ரோ ரயில்வேயில் அப்ரன்டிஸ் appeared first on Dinakaran.