*மாணவ, மாணவியர் அச்சம்
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பொது சுகாதாரத்தை பாதிக்கிறது. தெரு நாய்களின் தொல்லை காரணமாக, மக்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கின்றன.
தெருநாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவற்றை பிடித்து, தனி இடத்தில் வைத்து கருத்தடை செய்வது போன்ற தொழில்நுட்ப ரீதியாக கையாள்வது முக்கியம்.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சூழலிலும் தெருநாய்கள் குறையவில்லை. சமீப காலமாக நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் தெருநாய்கள் அதிகம் சுற்றி வருகின்றன.
தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் பெறவும், மாற்று சான்றிதழ் பெறவும் பள்ளிக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால் மாணவ, மாணவியர் அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post நாகர்கோவில் எஸ்எல்பி பள்ளி வளாகத்தில் சுற்றி வரும் தெருநாய்கள் appeared first on Dinakaran.