கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்; 200 அரசு டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா: தனித்தனியாக சமர்பிக்க மேற்குவங்க அரசு அறிவுறுத்தல்

3 months ago 17

கொல்கத்தா: அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது செல்லாது என்றும், மருத்துவ சேவை விதிகளின்படி தனித்தனியாக ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில், இறந்த பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு ஜூனியர் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாநில அரசு அளித்த உறுதிமொழியின்படி நடந்து கொள்ளாததால், ஜூனியர் டாக்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மேற்குவங்க அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 200 மருத்துவர்கள் பலர் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அளித்துள்ளனர்.

இருப்பினும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மருத்துவ சேவை விதிகளின்படி ஒரு அரசு ஊழியர் தனது ராஜினாமா கடிதத்தை தனிப்பட்ட முறையில் மேலதிகாரிக்கு அனுப்பாத வரை, அவர் ராஜினாமா செய்ததாக கருத முடியாது. குறிப்பிட்ட காரணங்களைக் குறிப்பிடாமல் மருத்துவர்கள் அனுப்பிய கடிதங்கள் வெறும் கூட்டு கையொப்ப கடிதமாக கருதப்படும். எனவே அவர்கள் தனித்தனியாக தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க வேண்டும்’ என்றார். அதேநேரம் மூத்த மருத்துவர்கள் ெதாடர்ந்து பணியில் இருப்பதால், அரசு மருத்துவமனைகளில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படவில்லை என்று அரசு கூறியுள்ளது.

The post கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்; 200 அரசு டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா: தனித்தனியாக சமர்பிக்க மேற்குவங்க அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article