போடி, ஜன. 11: போடி அருகே சில்லமரத்துப்பட்டி அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் அன்னகாமாட்சி மனைவி பிரியா. சில்லமரப்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி வள்ளி. கடந்த 2019 டிசம்பர் மாதம் வள்ளியிடம், பிரியா வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். அதன்பின்னர் அசல் மற்றும் வட்டியை செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரியாவிடம் மேலும் பணம் தரும்படி வள்ளி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, இது குறித்து எஸ்பி சிவப்பிரசாத்திடம் புகார் அளித்தார். இது குறித்து போடி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டார். இதன்பேரில் வழக்குப்பதிந்த எஸ்ஐ மணிகண்டன், தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.