கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது

3 days ago 2

 

வேடசந்தூர், மார்ச் 29: வேடசந்தூர் ஆத்துமேடு நால்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவர்கள் நின்று கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் வந்த ஒருவர் மாணவர்களிடம் தகாத வார்த்கைளால் பேசி கொண்டிருந்தார். அவரிடம் இருந்து மாணவர்கள் சற்று விலகி சென்றனர். ஆனாலும் அந்த போதை ஆசாமி விடாமல் மீண்டும் மாணவர்கள் அருகில் வந்து அவர்கள் மீது விழ முயன்றார். மேலும் தனது ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து நடனமாடினார். நேரம் செல்ல செல்ல அவரது செய்கையால் வெறுப்படைந்த மாணவர்கள் சத்தம் போட்டு அங்கிருந்து செல்லுமாறு மிரட்டினர்.

இதனால் ஆவேசமடைந்த போதை ஆசாமி மாணவர்களை மீண்டும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாணவர்கள் அந்த போதை ஆசாமியை நன்கு கவனித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் பழநியை சேர்ந்த அலெக்சாண்டர் (35) என்பது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்ஐ ஜெயலெட்சுமி வழக்குப்பதிந்து அலெக்சாண்டரை கைது செய்தார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Read Entire Article